பருப்புவடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டாணி பருப்பு -1 கப்

பெரிய வெங்காயம் -1

பச்சை மிளகாய் -1

பட்டை -1

கிராம்பு -2

சோம்பு -1/2 ஸ்பூன்

இஞ்சி -1 சிறியதுண்டு

கறிவேப்பிலை -1 இனுக்கு

புதினா -1 கைப்பிடி

கொத்தமல்லிதழை -1 கைப்பிடி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.ஊறிய பருப்பை 10நிமிடம் வடிதட்டியில் தண்ணீரைவடியவிடவும்.

வெங்காயம்,புதினா,கொத்தமல்லிதழை,கறிவேப்பிலை பொடியாக நருக்கவும்.இஞ்சியை தோல்நீக்கி கழுவிவைக்கவும்.

பருப்புடன் மிளகாய்,இஞ்சி,பட்டை,கிராம்பு,சோம்பு,உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த பருப்புடன் பொடியாக நருக்கியவற்றை போட்டு நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு காயவைக்கவும்.பருப்புகலவையிலிருந்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறிது அழுத்தி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: