பப்பாளி காய் வடை
0
தேவையான பொருட்கள்:
பப்பாளி காய் - 1
கடலைப்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 50 கிராம்
இஞ்சி - 10 கிராம்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பப்பாளிக்காயை மேல் தோலை நீக்கி விட்டு சிறிது சிறிதாக நறுக்கவும். கடலைப்பருப்பினை ஊற வைக்கவும்.
பின்னர் ஊறியதும் அதனுடன் பப்பாளிகாயையும் சேர்த்து அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை சிறிதாக அரிந்து, அரைத்த மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், அதில் மாவினை சிறிது சிறிதாக தட்டி போடவும். சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.