பனீர் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பனீர் - 200 கிராம்

உருளைக்கிழங்கு - 200 கிராம்

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

மல்லித்தழை - சிறிது

சோம்பு - 1 சிட்டிகை

கடலை மாவு - 1 1/2 கப்

அரிசி மாவு - 1/4 கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பனீரை சிறுதுண்டுகளாக நறுக்கவும். எண்ணெயில் பொரித்து நீரில் ஊற வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.

இத்துடன் கரம் மசாலா, நறுக்கிய மல்லி, உப்பு, வறுத்துபொடித்த சோம்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டைகள் செய்யவும்.

கடலைமாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

எண்ணெயை காய வைத்து பனீர் உருண்டைகளை மாவில் முக்கி பொன்னிறத்தில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: