பனீர் பக்கோடா
தேவையான பொருட்கள்:
பனீர் - 1/4 கிலோ
சோள மாவு - 1/4 கப்
கடலை மாவு - 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கலர் பொடி - ஒரு பின்ச்
சாட் மசாலா - தேவைக்கு
முட்டை - 1
மிளகு (இரண்டிரண்டாக பொடித்தது) - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பனீர் பக்கோடாவிற்கு அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும். பனீரை வேண்டிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து கட்டியில்லாமல் இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்கவும்
அதில் நறுக்கி வைத்திருக்கும் பனீரை சேர்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெயை காயவைத்த பின்னர் ஓவ்வொரு துண்டுகளாக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
டீயுடன் காப்பியுடன் சாப்பிட சுவையான பக்கோடா ரெடி.