பண்டிகை வடை
0
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 12 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 4
முந்திரி பருப்பு - 10
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லா பருப்புகளையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு வடிகட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த மாவை வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.