பட்டாணி கட்லட்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 200 கிராம்

பனீர் - 300 கிராம் (துருவிக்கொள்ளவும்)

பசலைக்கீரை ( பொடியாக நறுக்கியது) - 2 கப் ( பொடியாக நறுக்கியது)

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

மசாலாபொடி - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் ( பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

ப்ரட் தூள் - 1 கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சை பட்டாணியை வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் அரைக்கவும்.

பிரட்தூள் தவிர அனைத்தையும் கலந்து மாவு போல் பிசையவும்.

பிசைந்ததை உருண்டைகளாக உருட்டி தட்டில் பரப்பி வைத்துள்ள பிரட் தூளில் பிரட்டவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி நன்கு சூடேறியதும் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: