பட்டாணிப்பருப்பு வடை (ஆமை வடை)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பட்டாணிப்பருப்பு - 200 கிராம்
உளுந்து - 25 கிராம்
வெங்காயம் - ஒரு
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை, மல்லி இழை - தேவையான அளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பட்டாணிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இரண்டு பருப்புகளில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு உப்பு சேர்த்து பிசறி
கடாயில் எண்ணெய் சூடாக்கி வடைகளாக தட்டி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.