பட்டணம் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/4 கிலோ

அரிசி மாவு - 100 கிராம்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 5

முந்திரிப்பருப்பு - 25 கிராம்

கறிவேப்பிலை - 4 கொத்து

சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

டால்டா - 50 கிராம்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.

முந்திரியை வறுத்து பொடியாக உடைத்து வைக்கவும்.

எண்ணெய்யை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

டால்டாவை உருக்கி சமையல் சோடா சேர்த்து நன்றாக தேய்த்து பிறகு மாவுகளைப் போட்டு பிசறவும். நறுக்கி வைத்தவை மற்றும் முந்திரியைப் போட்டு பிசறவும்.

சிறிது நீர் தெளித்து மாவை நன்றாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

குறிப்புகள்: