பஞ்சாபி சமோசா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஃபில்லிங்:

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

வெங்காயம் - 2

பச்சைப்பட்டாணி - 50 கிராம்

ஆம்சூர்பவுடர் - 1 தேக்கரண்டி

ப்ளாக்சால்ட் - 1/2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 2

மல்லி இலை - சிறிது

மேல்மாவு:

மைதா - 1/2 கிலோ

சோடா - 1 பின்ச்

டால்டா - 50 கிராம்

உப்பு - சுவைக்கு

பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், மல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பை சிவக்கப் பொரிக்கவும்.

அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் ஆம்சூர்பொடி, ப்ளாக்சால்ட், உப்பு, தனியா சேர்த்து வதக்கி வேக வைத்த பட்டாணி மசித்த உருளையை சேர்த்துக்கிளறவும். மல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.

சோடாஉப்பு, டால்டா, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதில் மைதா மாவை சேர்த்து பிசறவும். சிறிது சிறிதாக நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

1மணி நேரம் ஊற வைக்கவும்.

சப்பாத்திக்கல்லில் மைதா தூவி எலுமிச்சம் பழ அளவில் மாவை உருட்டி தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும். அதனை இரண்டாக நடுவில் நறுக்கவும்.

அரை வட்ட வடிவில் கிடைக்கும் துண்டை சப்பாத்திக்கட்டையால் நீளமாக தேய்க்கவும்.

இதனுள் ஃபில்லிங்கை வைத்து மடித்து ஓரத்தில் மைதா பேஸ்ட்டால் ஒட்டி விடவும்.

அனைத்தையும் இந்த முறையில் செய்து எண்ணெயில் பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: