பஜ்ஜி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 100 கிராம்

மைதா மாவு - 100 கிராம்

அரிசி மாவு - 100 கிராம்

பெரிய உருளைக்கிழங்கு - 1

வாழைக்காய் - 1

கத்தரிக்காய் - 1

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை

ரீபைன்டு ஆயில் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை நீள வாக்கில் மெல்லியத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போன்ற வற்றை மெல்லிய வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடலை மாவு, அரிசி மாவு, மைதா, மிளகாய்ப் பொடி, சோடா உப்பு, கலர் பவுடர், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாய் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு வருமாறு போதிய தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி நன்றாக சூடானதும் சீவி வைத்துள்ள காய்கள் சீவல்களை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணையில் போடவும்.

இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிடவும். நன்றாக உப்பி வெந்ததும் (அழுத்தினால் அமுங்க கூடாது) வெளியில் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: