பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 200 கிராம்

மைதா மாவு - 100 கிராம்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

கலர்ப்பொடி - ஒரு சிட்டிகை

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

சின்ன வாழைக்காய் - 1

பெரிய வெங்காயம் - 2

உருளைக்கிழங்கு - 1

பெரிய கத்தரிக்காய் - 1

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயையும், கத்தரிக்காயையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.

கடலை மாவு, மைதா மாவு மிளகாய் தூள், பெருங்காயத்தூள், சோடா உப்பு, உப்பு, கலர்பொடி ஆகியவற்றுடன் சோம்பையும், பூண்டையும் அரைத்து போட்டு கெட்டியாக (இட்லி மாவு) பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் 300 கிராம் எண்ணெய் விட்டு சூடானவுடன் காய்களை மாவில் மூக்கி எண்ணெயில் 4 அல்லது 5 ஆக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: