பச்சைபட்டாணி வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முளைக்கட்டிய பச்சைபட்டாணி - 1 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 2

காய்ந்தமிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

பட்டை, கிராம்பு, சோம்பு - சிறிது

அரிசி மாவு - சிறிதளவு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு அதனுடன் பட்டாணியை சேர்த்து அரைக்கவும்.

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் அரிசிமாவு, நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டவும்.

சூடாக உள்ள எண்ணெயில் தட்டிய வடைகளை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: