பச்சரிசி முறுக்கு (1)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு (நனைத்து காய வைத்தது) - 4 பங்கு
உளுந்து (சிவப்பாக வறுத்தது) - 1 பங்கு
ஓமம் - 1 தேக்கரண்டி
வெண்ணைய் - 1/2 கப்
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் நைசாக பொடித்து சலித்தெடுக்கவும்.
அதனுடன் ஓமம்,உப்பு, வெண்ணையை கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.
பின் முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுத்து பரிமாறவும்.