பச்சரிசி ஓலை பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பொட்டுக்கடலை - 8 தேக்கரண்டி
சோடா உப்பு - 2 சிட்டிகை
டால்டா - 2 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
பெருங்காயப்பவுடர் - 1/2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 2 கை
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை 2 மணி நேரம் நீரில் ஊற வைத்து, வடித்து, இடித்து சலிக்கவும். பிறகு அதை வெறும் வாணலியில் வறுக்கவும். சற்று பழுப்பு நிறம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
பொட்டுக்கடலையை மாவாக்கவும்.
தேங்காயை பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும்.
அனைத்துப் பொருட்களையும் தேவையான உப்புடன் கலந்து பிசைந்து சூடான
எண்ணெயில் ஓலை பக்கோடாவாக பிழியவும்.
குறிப்புகள்:
டீயுடன் காப்பியுடன் சாப்பிட சுவையான பக்கோடா ரெடி.