பக்கோடா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/2 டம்ளர்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

வெங்காயம் ( பெரியது நீளமாக அரிந்தது) - 3

இஞ்சி (துருவியது) - 1 தேக்கரண்டி

பூண்டு (தோலுடன் தட்டியது) - 3 பல்

பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1

சோடா மாவு - ஒரு பின்ச்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காய தூள் - ஒரு பின்ச்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும்.

பிறகு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை சேர்க்கவும்.

கடலை மாவில் அரிசி மாவு, உப்பு, சோடா மாவு, மிளகாய் தூள் சேர்த்து வெங்காய கலவையுடன் சேர்த்து பிசறவும். கறிவேப்பிலையை நல்ல பொடியாக நறுக்கி போடவும். பக்கோடாவிற்கு கறிவேப்பிலை தான் மெயின்.

தண்ணீரை லேசாக தெளித்து கலவை பிசறினாற் போல் இருக்கனும். எண்ணெயை காய வைத்து வெங்காய கலவையை கிள்ளி போட்டு சிவந்ததும் எடுத்து எண்ணெயை நல்ல வடிய விடவும். இருமுறை நியூஸ் பேப்பரில் மாற்றி டிஷு பேப்பரில் வைக்கவும்.

குறிப்புகள்:

இத்துடன் தேவைப்பட்டால் புதினா, கொத்தமல்லி, கேரட், கேபேஜ் சேர்த்துக் கொள்ளலாம்.