நேந்திரன் சிப்ஸ்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

நேந்திரன் வாழைக்காய் - 3

டேபிள் சால்ட் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

நேந்திரன் காயை மூழ்கும் அளவுக்கு நீரில் ஊற விடவும். (இது தோலை சுலபமாக உரிப்பதற்காக.)

சுமார் 10 - 20 நிமிடங்கள் ஊற விட்டு கத்தியால் காயில் நீளமாக கீறி விடவும்.

கீறிய பகுதியில் விரலை வைத்து பிளந்து தோலை கையாலேயே சுலபமாக உரிக்க வரும்.

இந்த சிப்ஸுக்கு தோலை கத்தியால் உரிக்க கூடாது. ஷேப் மாறி விடும்.

1/4 டம்ளர் நீரில் உப்பை கரைத்து வைக்கவும்.

எண்ணெயை காய வைத்து வாணலியின் மேலாக சிப்ஸ் கட்டரை வைத்து தோல் நீக்கிய நேந்திரங்காயை சீவவும்.

உப்பு கரைசலை 1 ஸ்பூன் விட்டு ஜல்லிக்கரண்டியால் கிளறி விடவும்.

கரகரப்பாக வெந்ததும் எண்ணெய் வடிய விட்டு ஆற விட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்புகள்: