நெய் முறுக்கு (2)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
நெய் - 50 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - 1 சிட்டிகை
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து கல் நீக்கி சுத்தப் படுத்தவும்.
பிறகு நீரை சுத்தமாக வடித்து விட்டு அரிசியை நிழலில் காய வைக்கவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக மிஷினில் அரைக்கவும்.
வெறும் வாணலியில் பச்சரிசிமாவை வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த மாவை ஆற வைக்கவும்.
மாவு ஆறியதும் அகலமான பாத்திரத்தில் கொட்டவும். இதனுடன் உளுத்த மாவு, உப்புத் தூள், சீரகம், சுத்தப்படுத்திய எள்ளு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
நெய்யில் சோடா உப்பு சேர்த்து நன்கு குழைந்து மாவில் சேர்த்து மறுபடியும் கலந்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து மாவை முறுக்கு அச்சியில் போட்டு எண்ணெயில் பிழிந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.