நெய் முறுக்கு ( 1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 1/2 கப்

பொரிகடலை - 1 1/4 கப்

எள் அல்லது சீரகம் - 1 மேசைக்கரண்டி

நெய் - 50 கிராம்

தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊறவைத்து உரலில் மாவாக அரைத்து ஈரப்பசை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பொரிகடலையை மிக்ஸியில் பொடித்து மாவாக்கி, அரிசி மாவுடன் கலந்து கொள்ளவும்.

உப்புத் தண்ணீர் தெளித்து, எள்ளு போட்டு நெய்யைக் காயவைத்து மாவில் ஊற்றி கட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

முறுக்குக் குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு மாவை அதனுள் வைத்து காயவைத்த எண்ணெயில் முறுக்குப் பிழியவும்.

பிறகு இருபுறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: