நெத்திலி மீன் பக்கோடா (2)
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 15
பட்டாணி மாவு - 150 கிராம்
மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நச்சீரகம் - 1/4 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 2 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், கொத்தமல்லி மூன்றையும் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
மீனை சுத்தம் செய்த பின்பு அதில் மஞ்சள் தூள், மசாலா தூள், உப்பு போட்டு பிரட்டி வைக்கவும் .
மாவில் உப்பு, ஆப்ப சோடா, மசாலா தூள், செய்து வைத்துள்ள பொடி அனைத்தையும் போட்டு நச்சீரகம் ,பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி பக்கோடா பதத்திற்கு மாவை கலந்து கொள்ளவும் .
அடுப்பில் பொரிக்கும் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றவும் .
எண்ணெய் சூடானதும் மீனை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் .
மிதமான தீயில் அனைத்து மீன்களையும் பொரித்து எடுக்கவும்