நெத்திலி மீன் பக்கோடா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/2 அல்லது 3/4 டீ கப்

பெரிய வெங்காயம் - 1/2

கறிவேப்பிலை - 2 கொத்து

பச்சை மிளகாய் - 1/2

கடலை மாவு - 2 1/2 மேஜைக்கரண்டி

அரிசி மாவு - 3/4 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து நீர் இல்லாமல் வடித்து அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து பிரட்டி 1/2 மணி நேரம் வைக்கவும்.

வெங்காயம் நீளமா வெட்டி வைக்கவும். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலையும் பொடியாக நறுக்கவும்.

மீனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மாவுக்கு கொஞ்சம் உப்பு, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் கலந்து கொண்டு கொஞ்சம் நீர் விட்டு பிசரி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பக்கோடாவாக போடவும். மிதமான தீயில் நன்றாக திருப்பி விட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: