நூல்கோல் வடை
0
தேவையான பொருட்கள்:
நூல்கோல் - 2
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் - 3
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 10 பல்
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறூக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்க்கவும்.
நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர்விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
இதில் கொத்துமல்லி தழையைப் பொடியாக நறுக்கிப்போட்டு காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி போட்டு, சிவக்க வேக வைத்து பரிமாறவும்.