நீராவி வடை

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 கப்

உளுத்தம்பருப்பு - 1/2 கப்

தேங்காய் - 1

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் நன்றாக கழுவி தண்ணீர் விட்டு சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு நீரை வடித்துவிட்டு, தேங்காயைத் துருவி அதில் போடவும்.

உப்பையும் அதனுடன் சேர்த்து உரலில் அல்லது கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

மிளகு, சீரகம் இரண்டையும் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

மாவினை சிறுசிறு வடைகளாகத் தட்டி, இட்லி பானையில் வைத்து நீராவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: