நவரத்ன வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 100 கிராம்

பயறு - 100 கிராம்

கொண்டக்கடலை - 100 கிராம்

பட்டாணி - 100 கிராம்

காராமணி - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

வெங்காயம் - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 7

இஞ்சி - ஒரு துண்டு

பெருங்காயம் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதல் நாளே அரிசியை மட்டும் தனியாகவும், மற்ற தானியங்களை ஒன்றாய் சேர்த்தும் ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் காலை அல்லது தேவையான போது தானியங்களையும், அரிசியையும் தனித்தனியாக கழுவி பின்பு கலந்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவில் உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெயை விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை வடை போல தட்டி போட்டு நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: