நண்டு கட்லெட்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அவித்த பெரியநீளக்கால் நண்டு சதை - 5

முட்டை - 2

கடலை மாவு - கால் கிலோ

சின்னவெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிலோ

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 10

ரக்ஸ்தூள் - 100 கிராம்

உள்ளி - ஒன்று

கறுவாப்பட்டை - சிறிய துண்டு

கிராம்பு - 3

பெருஞ்சீரகம் - 2 தேவையானளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

இஞ்சி, உள்ளி, பெருஞ்சீரகம், கிராம்பு, கறுவாப்பட்டை ஆகியவற்றை நீர் விட்டு மைய அரைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதன் பின்பு நண்டு சதையுடன், கடலை மாவு, வதக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் அரைத்தகலவை, உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அவற்றை சாதுவாக அமர்த்தி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை நன்றாக நுரை வரும்வரை அடிக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் உருட்டி தட்டிய கட்லெட்டை முட்டையில் தோய்த்து ரக்ஸ் தூளில் பிரட்டி அதை எண்ணெயில் போட்டு சிவக்க எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: