தேங்காய்பால் முறுக்கு

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்

தேங்காய் பால் - 1 கப்

பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை

எள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்க்கவும்.

பின்பு தேங்காய் பால் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.

பின்பு முறுக்கு சுற்றும் அச்சில் மாவை வைத்து முறுக்கு பிழிந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கை போட்டு பொரிக்க வேண்டும். முறுக்கு நன்றாக வெந்து சிவந்த பிறகு எடுத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தேங்காய் பால் சேர்ப்பதால் சுவை அதிகமாக இருக்கும். தேவையானால் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காய் பால் சேர்க்க விரும்பாதவர்கள் வெண்ணெய், டால்டா அல்லது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.