தூள் பக்கோடா
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
பெருங்காயப்பொடி - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 5
பேக்கிங் சோடா - 2 சிறிது
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 100 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு (விரும்பினால்) - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெருங்காயத்தை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
நறுக்கியவற்றுடன் பேக்கிங் சோடா, நெய் சேர்த்து நன்கு பிசறவும். விரும்பினால் சிறித்து முந்திரிப்பருப்பும் சேர்க்கலாம். பின்பு கடலை மாவு, அரிசிமாவு, கரைத்த பெருங்காயம் சேர்த்து பிசறவும். தண்ணீர் தேவைப்படாது, விரும்பினால் சிறிது தெளித்து கொள்ளவும்.
எண்ணெய் நன்கு சூடாக்கவும். காய்ந்ததும் ஒரு கையளவு எடுத்து உதிர்த்து போடவும். நன்கு உதிரியாக இருக்க வேண்டும், உருண்டையாக இருக்கக்கூடாது. எண்ணெய் அளவை பொறுத்து மொத்தமாகவோ சிறிது சிறிதாகவோ பொரித்து எடுக்கலாம்.
நன்கு சிவந்தவுடன் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு ஆறியவுடன் பரிமாறலாம்.