தில் கீரை வடை
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பின்ச்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1 " துண்டு
தில் கீரை - 1/2 கட்டு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரண்டு வகை பருப்புகளை ஒன்றாக போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கிரைண்டரில் முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் ஊற வைத்த பருப்புகளைப் போட்டு கொரகொரப்பாக வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும். இதனுடன் மிளகாய் தூளையும் கலக்கவும். வெங்காயம் மற்றும் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கின வெங்காயம் மற்றும் கீரையை பருப்பு கலவையுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வடைகளாக தட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடைகளை போட்டு தீயை மிதமாக வைத்து பொரித்து எடுத்து பரிமாறவும்.