திடீர் மசால் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1 கைபுடி

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 4

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

இஞ்சி - 1 அங்குல துண்டு

கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். அதுக்கும் நேரமில்லையா சூடு தண்ணீரில் 10 நிமிடம் மூடி போட்டு ஊறவைக்கவும்.

காய்ந்த மிளகாய் சோம்பு பூண்டு இஞ்சி அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.

கடலை மாவுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் தெளித்து பிசையவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கடைசியாக அரிசி மாவு சேர்த்து பிசையவும்.

இப்பொழுது ஊறவைத்த பருப்பை நன்கு பிழிந்து மாவுடன் சேர்த்து பிசைந்து உப்பு சரி பார்த்து தட்டி எண்ணையில் போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: