தவளை வடை (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 50 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
துவரம் பருப்பு - 25 கிராம்
கடலை பருப்பு - 25 கிராம்
பாசி பருப்பு - 25 கிராம்
உளுத்தம்பருப்பு - 10 கிராம்
ஜவ்வரிசி - 10 கிராம்
சிவப்பு மிளகாய் - 5
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2
தேங்காய் (பொடிதாக நறுக்கியது) - 1/2 மூடி
கொத்தமல்லி தழை (பொடிதாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 2 இனுக்கு
நல்லெண்ணைய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி,புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுத்தம் பருப்பு, ஜவ்வரிசி இவற்றை ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து கொஞ்சம் தண்ணீரை வடித்து விட்டு சிவப்பு மிளகாய், பெருங்சீரகம், உப்பு இவற்றை சேர்த்து அரைக்கவும்.
வாணாலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை போட்டு இறக்கி அரைத்த மாவில் கொட்டவும்.
அதனுடன் கொத்தமல்லி தழை, தேங்காய் பல் இவற்றை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் கரண்டியில் மாவை அள்ளி ஊற்றி வடைகளை பொரித்து எடுத்து பரிமாறவும்.