தவளை வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

கடலைப்பருப்பு - 50 கிராம்

துவரம் பருப்பு - 50 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

உளுத்தம் பருப்பு - 25 கிராம்

ஜவ்வரிசி - 25 கிராம்

சிவப்பு மிளகாய் - 10

சோம்பு - 1 தேக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி

வெங்காயம் - 100 கிராம்

கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசிகள், பருப்புகள் ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து, சிவப்பு மிளகாய், உப்பு, சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

தேங்காயை பல் பல்லாக நறுக்கிக்கொள்ளவேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, அரைத்த மாவில் கொட்ட வேண்டும்.

அதனுடன் தேங்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் 1/2 லிட்டர் எண்ணெய்யை காய வைத்து மாவை வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: