தவலடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 1 கப்

கடலைப் பருப்பு - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

மிளகு - ஒரு பிடி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இவை எல்லாவற்றையும் கலந்து மிஷினில் கொடுத்து, அரிசி உப்புமா குருணை போல் திரித்துக் கொள்ளவும்.

நன்கு பொடியான மாவை சலித்து எடுத்து விடவும்.

ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் சிறிது பெருங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், விருப்பத்திற்கு ஏற்றார்போல் தேங்காய் சேர்த்துக் கிளறவும்.

பிறகு இதனை கட்லெட் போல் தட்டி, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, அதில் போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: