தயிர் வடை (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊளுந்து - 200 கிராம்

தேங்காய் துருவல் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 4

தயிர் - 3 கப்

மிளகு - 5

பெருங்காயம் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை 1/2 உப்பு சேர்த்து பொங்க பொங்க அரைக்கவும் தேவையானால் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்

கிரைண்டரில் அரைக்கவும் மிக்ஸியில் அரைத்தால் மாவு பொங்காது.

அரைத்த மாவில் மிளகு, பெருங்காயம் கறிவேப்பிலை(நறுக்கி) தேங்காய் துண்டு ( நறுக்கியது) சேர்த்து வடை தட்டவும்

துருவிய தேங்காய் பச்சைமிளகாய் நன்கு அரைத்துக் கொள்ளவும்

அரைத்ததுடன் தயிர் உப்பு 1/2 கொத்தமல்லி( நறுக்கியது)சேர்த்து வைத்துக் கொள்ளவும்

வெந்து எடுத்த வடைகளை சூடுடன் இருக்கும்போதே பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் வைத்து அதில் 1/2 நிமிடம் ஊற வைக்கவும்

ஊற வைத்த வடைகளை அரைத்து கலந்து வைத்திருப்பதுடன் சேர்க்கவு தேவையானால் காராபூந்தி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: