தயிர் வடை (3)
தேவையான பொருட்கள்:
வடைக்கு:-
உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்
பச்சரிசி - 1 தேக்கரண்டி
ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/2 லிட்டர்
தேங்காய் துருவல் - 1/4 மூடிூடி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 அங்குல துண்டு
கொத்தமல்லி தழை - 1/2 கட்டு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
தேங்காய், மிளகாய், சீரகம், இஞ்சி, பாதி கொத்தமல்லி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்தவற்றை உப்பு சேர்த்து, தயிருடன் கலக்கவும்.
பொரித்த வடைகளை கொதிக்கும் நீரில் 1 நிமிடம் போட்டு எடுத்து, தயிரில் ஊற விடவும்.
மீதியுள்ள கொத்தமல்லிகளைப் பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும்.