தயிர் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - 1/4 லிட்டர்

உளுந்தம் பருப்பு - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - ஒரு துண்டு

புதினா - சிறிதளவு

கொத்தமல்லி - அரை கொத்து

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - 1/2 கொத்து

செய்முறை:

உளுத்தம் பருப்பு ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை எல்லாம் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

உளுத்தம் பருப்பு மிக்ஸியில் நைஸாக அரைத்துகொள்ளவும்.

அரைத்தபின் உளுத்தம் மாவில் அரிசி மாவு, உப்பு சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும்.

தயிரை நன்றாக கடைந்து உப்பு சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகு, உளுந்து, சீரகம், பாதி அளவில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து தயிரில் சேர்க்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும்.

வடைகளை தட்டி போட்டு வெந்ததும் எடுத்து ஆற வைக்கவும். பிறகு வடைகளை தயிரில் போட்டு கொத்தமல்லி இலைகளையும் தூவவும்.

குறிப்புகள்: