தயிர் போண்டா
தேவையான பொருட்கள்:
பாசிபருப்பு - 1 கோப்பை
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
தயிர் - 1 1/2 கோப்பை
மிளகாய்தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - ஒரு பிடி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பையும், உளுந்தையும் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
அடுத்த நாள் நன்கு கழுவி உப்பைப் போட்டு தேவையான நீரைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு சட்டியில் எண்ணெயை காய வைத்து மாவுக் கலவையிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். இதனை சுடு தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து எடுத்து நீரை சொட்ட பிழிந்து ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.
பிறகு தயிரில் ஒரு சிட்டிகை உப்புத்தூளும் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் போட்டு நன்கு கலக்கி உருண்டைகளின் மீது ஊற்றவும்.
பிறகு சீரகத்துளையும், மிளகாய்தூளையும் ஒன்றாக கலக்கி மேலாக தூவி, நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.