தட்டை (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

பொட்டுக்கடலை - 1/4 கப்

பயத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 1/4 கப்

வற்றல் மிளகாய் - 5

பெருங்காப்பவுடர் - 1 தேக்கரண்டி

வெள்ளை எள் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை போதுமான தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிக்கவும்.

பிறகு நிழலில் உலர வைக்கவும்.

உலர்ந்த அரிசியை எடுத்து மிக்சியில் போட்டு மாவாக்கி நன்கு சலிக்கவும்.

உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சற்று சிவக்க வறுத்து பிறகு மாவாக்கி நன்கு சலிக்கவும்.

தேங்காயை மிளகாய் வற்றலுடன் நன்கு அரைக்கவும்.

பொட்டுக்கடலையையும் மாவாக்கவும்.

அனைத்தையும் ஒன்று கலந்து உப்பு, எள், வெண்ணெய், கறிவேப்பிலை, போதுமான நீர் சேர்த்து மிருதுவாக பிசையவும்.

சிறிய உருண்டைகள் செய்து, பிறகு அவற்றை மெல்லிய தட்டைகளாக தட்டி சூடான எண்னெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவம்.

குறிப்புகள்: