தட்டை (4)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 4 பங்கு
பொட்டுக்கடலை மாவு - 1 பங்கு
பூண்டு - 5 பல் (நசுக்கியது)
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கி வெறும் வாணலியில் போட்டு வறுத்தது) - 1 இனுக்கு
பெருங்காயம் (கொஞ்சமாக தண்ணீரில் கரைத்தது) - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு (ஊற வைத்தது) - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
வெண்ணைய் - 1 தேக்கரண்டி
சோடா மாவு - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் தவிர) கலந்து பிசைந்து, தேவையெனில் தண்ணீர் தெளித்து வைக்கவும்.
சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கையால் தட்டி தட்டி வட்டமாக இட்டு காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.