தட்டை (3)
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி (அல்லது) இட்லி அரிசி - 4 ஆழாக்கு
பொட்டுக்கடலை - 1 ஆழாக்கு
கடலைப்பருப்பு - 1/2 ஆழாக்கு
எள் - 50 கிராம்
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து மையாக முடிந்தவரை கெட்டியாக ஆட்டவும். பொட்டுக்கடலையை தூளாக்கி கொள்ளவும்
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். எள்ளை வெறும் கடாயில் சிறு தீயில் கருகாமல் படபடவென வெடித்ததும் எடுத்து மாவில் கொட்டவும்.
மிளகாய்ப்பொடி, பெருங்காயம், ஊறிய கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு போன்றவற்றை மாவுடன் போட்டு பிசையவும்.
மாவு கெட்டியாக தட்டக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும். இல்லையேல் இன்னும் சிறிது பொட்டுக்கடலைமாவு போட்டு கொள்ளலாம்.
ஒரு கனமான ப்ளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி எலுமிச்சையளவு மாவு எடுத்து வட்டமாக தட்டி ஒரு துணியில் (அ) பேப்பரில் வரிசையாக போட்டு வைக்கவும்.
இப்படி எல்லாவற்றையும் தட்டிய பிறகு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி கொள்ளும் அளவு தட்டைகளை போட்டு பொரிக்கவும். எண்ணெய் சலசலப்பு அடங்கினால் தட்டை வெந்திருக்கும்.