தட்டை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி (இட்லி அரிசி) - 4 கப்

மிளகாய் வற்றல் - 15

பெருங்காயப் பவுடர் - 1/2 தேக்கரண்டி

பொட்டுக்கடலை - 1 கப்

கடலைப்பருப்பு - 1/2 கப்

எள் - 2 தேக்கரண்டி

தேங்காய் (பொடியாக நறுக்கியது) - 4 தேக்கரண்டி

கருவேப்பிலை - 1 கொத்து

ரீபைண்ட் ஆயில் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாகத் திரித்துக் கொள்ளவும்.

இதனுடன், மிளகாயையும் போட்டு, பவுடராக ஆக்கிக் கொள்ளவும்.

ஊறிய அரிசியை, கிரைண்டரில் போட்டு, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவுடன், பொட்டுக்கடலை மாவு, எள், ஊறிய கடலைப் பருப்பு, பொடியாக அரிந்த தேங்காய், பெருங்காயப் பவுடர், கருவேப்பிலை, உப்பு எல்லாம் சேர்த்து, உருட்டும் பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

2-3 ப்ளாஸ்டிக் ஷீட்கள் எடுத்துக் கொள்ளவும்.

அவற்றில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

மாவை, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கை அகலத்துக்கு மெல்லிய தட்டைகளாகத் தட்டவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும், தட்டைகளை உடையாமல் எடுத்து, எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமானதும், எடுக்கவும்.

குறிப்புகள்: