டூனா மீன் கட்லெட்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

டூனா மீன் - 1 டின்

முட்டை - 2

வேக வைத்த உருளைக்கிழங்கு - 1

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

கேரட் - 1

இஞ்சி, பூண்டு - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

உப்பு, மல்லி தழை - சிறிது

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். டூனா மீன் டின்னை உடைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

முட்டையை உடைத்து ஊற்றவும். பிறகு எல்லா தூள் வகைகளையும் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை, மற்றும் கேரட்டையும் சேர்க்கவும்.

வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு எல்லாம் சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும். பின் வட்டமாக தட்டி சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: