ஜாலர் சம்சா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கிலோ

முட்டை - 4

சின்ன வெங்காயம் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

காரட் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பச்சைபட்டாணி - 50 கிராம்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

புதினா - ஒரு கொத்து

மல்லி - ஒரு கொத்து

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 10 பல்

பச்சைமிளகாய் - 5

சோம்பு - 1 தேக்கரண்டி

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

ஜாலர் குவளை ஆயில் - 1/4 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதாவை எடுத்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு முட்டையை உடைத்து அதில் ஊற்றவும்.

நாட்டு வெங்காயத்தையும் சோம்பையும் மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை கரைத்த மாவில் வடிகட்டி பிழியவும்.

அதன் பிறகு உருளைக்கிழங்கு, காரட், வெங்காயம் அனைத்தையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, காரட், மிளகாய்தூள், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு தூள் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு நறுக்கின பெரிய வெங்காயத்தை அத்துடன் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கிளறவும். பிறகு இறக்கி வைத்து மல்லி, புதினா தழையினைத் தூவவும்.

அதன் பிறகு கரைத்து வைத்துள்ள மாவினை ஜாலர் குவளையில் எடுத்து தோசை கல்லில் ஊற்றவும்.

மூன்று தோசையை எடுத்து, தயார் செய்து வைத்திருக்கும் மசாலா உள்ளடத்தை அதனுள்ளே வைத்து, தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி மீண்டும் லேசாக சுடவும்.

குறிப்புகள்: