ஜவ்வரிசி வடை (1)

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சின்ன ஜவ்வரிசி - 1/4 கிலோ

தயிர் - 200 கிராம்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - சிறிது

பெருங்காயம் - சிறிது

சின்ன வெங்காயம் - 10

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியைக் கழுவி, தயிரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். உப்பு, பெருங்காயம் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

வெங்காயம், இஞ்சி, மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்து சிறிய வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: