ஜவ்வரிசி போண்டா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்

புளித்த தயிர் - 1 கப்

கடலை மாவு - 1 மேசைக்கரண்டி

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1/4 கப்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி

துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - 1 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 1 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியுடன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

இட்லி மாவை விட கெட்டியாக இருக்க வேண்டும்.

எண்ணெயைக் காய வைத்து இந்த ஜவ்வரிசி மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு, போண்டாக்கள் சிவந்தவுடன் எடுத்து பரிமாற வேண்டும்.

குறிப்புகள்: