ஜவ்வரிசி போண்டா

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்

புளித்த தயிர் - 1 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - ஒரு துண்டு

கடலை மாவு - 1 மேசைக்கரண்டி

அரிசிமாவு - 1 மேசைக்காண்டி

பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஜவ்வரிசியில் தயிர் உப்பு சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் ஊறிய ஜவ்வரிசி கலவையில் நறுக்கியவற்றை போட்டு பெருங்காயம் சேர்த்து கடலைமாவு, அரிசிமாவு சேர்த்து பிசையவும்.

கலவை கெட்டியாக இருக்க வேண்டும். உருண்டையாக பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்: