ஜவ்வரிசி பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடிதாக உள்ள ஜவ்வரிசி - 1 கப்

ரவை - 1 கப்

பச்சரிசி மாவு - 1 கப்

தயிர் - 2 கப்

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்

முந்திரி பருப்பு (பொடிதாக நறுக்கியது) - 1/4 கப்

இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - சிறிதளவு

மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 3 என்னம்

கொத்தமல்லி தழை (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

இதனுடன் ரவை, பச்சரிசி மாவு சேர்த்து பிசையவும்.

இதனுடன் பச்சைமிளகாய்,வெங்காயம்,கொத்தமல்லி தழை,முந்திரி பருப்பு, இஞ்சி, உப்பு சேர்த்து மீண்டும் பிசைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய வைத்து கலவையை உதிர்த்து பக்கோடா போல் போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: