சௌ சௌ பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சௌ சௌ - 1

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சௌ சௌவை தோல் நீக்கி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். விதையை நீக்கிவிடவும்.

கடலை மாவுடன் அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள சௌ சௌ துண்டுகளை மாவுக்கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு இரு புறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சௌ சௌ துண்டுகளை கிச்சன் டவலில் ஒற்றிவிட்டுத் தோய்த்தால் மாவுக்கரைசல் வழுக்காமல் பிடிக்கும்.