சோள வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோள மாவு - 1/2 கிலோ

ரவை - 2 மேசைக்கரண்டி

தயிர் - 4 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

இஞ்சி - சிறியத் துண்டு

சர்க்கரை - 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோளமாவு, மைதாமாவு இரண்டையும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் தயிரையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை, மஞ்சள்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி, தேவையான அளவு உப்புச் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

மாவு தண்ணீராக இல்லாமல் சற்று கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

சில மணி நேரம் கழித்துச் சிறு உருண்டைகளாகச் செய்துக் கொண்டு வடை அளவிற்கு வட்டமாக ஆனால் மெல்லியதாகத் தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் விட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: