சோள மசாலா பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
சோள இட்லி மாவு - 1 கப்
அரைக்க:
தக்காளி - ஒன்று
வரமிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, சோள இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
விரும்பினால் பொடியாக நறுக்கி வதக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம்.