சோயா உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயா உருண்டை - 1 கப்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2

இஞ்சி - சிறு துண்டு

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - 1/2 மூடி

சோம்பு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

செய்முறை:

சோயா உருண்டைகளை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் தூள் செய்து வைக்கவும். அரைக்க தந்துள்ள பொருட்களை மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

இந்த இரண்டு கலவைகளையும் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

இதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ளவும்.

மாவு கலவைகளை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொள்ளவும். அந்த உருண்டைகளை பொட்டுக்கடலை மாவுடன் ஒரு உருட்டு உருட்டி, சூடான எண்ணெயில் போடவும்.

அடுப்பின் தணலை சிம்மில் வைத்து பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: