சேவு
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 4 பங்கு
பச்சரிசி மாவு - 1 பங்கு
வத்தல் பொடி - காரத்திற்கு ஏற்ப
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, பச்சரிசி மாவையும் சலிக்கவும்.
அதனுடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
அதனை முறுக்கு அச்சில் உள்ள மூன்று ஓட்டை அல்லது ஒரு ஓட்டை உள்ள அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து எடுக்கவும். சுவையான காரமான சேவு ரெடி